யோகி – இன்றொரு சேதி


O
1947 ல் யோகி ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் தங்கி இருந்த போது பப்பா ராமதாசர் குறித்தும், ஆனந்தாஸ்ரம் குறித்தும் எங்ஙனம் அறிந்தார் ?
O
யோகி ரமணாஸ்ரமத்தில் தங்கியிருந்தபோது, ஒரு சாது ஒரு பத்திரிகைத் துண்டை (Newspaper cutting ) யோகியிடம் அளித்தார்.
O
அதில் கேரளாவில் உள்ள ஆனந்தாஸ்ரம் குறித்தும், பப்பா ராமதாசர் மற்றும் மாதாஜி கிருஷ்ணபாய் குறித்தும் செய்திகள் வெளியாகி இருந்தன.
O
இது ஆனந்தாஸ்ரமம் செல்லும் ஆர்வத்தை யோகியிடம் ஏற்படுத்தியது.
O
திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் இருந்து யோகி கேரள மாநிலம் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமம் சென்றார்.
O
தெய்வீக ஆற்றல், நாம் எங்கிருந்தாலும், நாம் செல்ல வேண்டிய திசை நோக்கி நம்மை ஈர்த்துக் கொண்டு சென்றுவிடும். சிறிய காகிதத்துண்டு கூட அந்தப் பணியை செய்துவிடும். எல்லா நிகழ்வுகளும் நன்மையை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா