ஜன்ம சாபல்யம் என்றால் என்ன?/ரங்கநாதன் கணேஷ்

ஒரு முறை JK பெங்களூரில் தன் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.அப்பொழுது அந்த நண்பர் JKயிடம் “உங்கள் தீவிர வாசகி வீட்டிற்கு உங்களை அழைத்துபோகிறேன்!” என்று சொல்லி அவரை தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அங்கே JK விற்கு ராஜோபசாரம்,விருந்து எல்லாம் ஒரே தடபுடல்..

பிறகு பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண்மணிக்கு ஒரே மகன் என்றும்,அவனும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இளவயதிலேயே இறந்துவிட்டான் என்றும், பிறகு தன் இளம் மருமகளுக்கு தானே நிர்ப்பந்தித்து சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் மறுமணம் செய்து வைத்ததாகவும் அறிய வர, வியந்து போனJK ,இவ்வளவு முற்போக்கு சிந்தனையா உங்களுக்கு என்று சிலாகிக்க அந்த பெண்மணி அடக்கமாக சொல்கிறார்…

“நான் உங்க வாசகி சார் ! வேறு எப்படி சிந்திக்க முடியும்?”

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

JK என்ற ஈரெழுத்து வரம் தமிழ் உள்ளளவும் இருந்து தமிழர்களை பெருமைபடுத்தி வழி நடத்தும்..

பக்தி,பணிவு, நன்றியுடன்,

மனித இனத்தின் தலை சிறந்த சிந்தனையாளர் ஒருவருக்கு,

ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

2 Comments on “ஜன்ம சாபல்யம் என்றால் என்ன?/ரங்கநாதன் கணேஷ்”

Comments are closed.