
தாதி தூதோ தீது
வெறும் தகர வரிசை எழுத்துக்களைக் கொண்ட காளமேகப் புலவரின் பாடல் இது.
இதன் பொருள் :
தாதி(பணிப்பெண்) செல்லும் தூது சிறப்பானதன்று. தத்தை(கிளி) ஒழுங்காக தூது சொல்லாது. தூதி(தோழி) தூது நாட்கடத்தும். தாது போன்ற தேமல்கள் என்மீது படராமலிருக்க தெய்வத்தைத் தொழுதலும் தீது. தித்திக்கும் என் தலைவனின் பெயரை ஓதிக் கொண்டிருப்பதே நான் செய்யக் கூடியது.
இதே போன்ற மற்றொரு பாடலும் தத்தித்தா தாதூதி என காளமேகத்தால் பாடப் பட்டுள்ளது.
இப்பாடல் சிறு மாற்றம் செய்யப்பட்டு கண்ணதாசனால் வானம்பாடி திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டது
“தாதிதூ தோதீது
தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த
தூததே – தாதொத்த
துத்திதத் தாதே
துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித்
திதி”
