வானவில் நாட்கள்/கனகா ரமேஷ்

(நினைவலைகள்)

1

எங்களுக்கு ஒரு உறவினர் இருந்தார். உறவு முறை சரியாக தெரியவில்லை. எல்லாரும் அவர் பெயருடன் மாமா சேர்த்து அழைப்போம் .

விடுமுறையில் பாட்டி வீட்டில் அவர் தினமும் ஓசி பேப்பர் ம‌ற்று‌ம் காபிக்கு வ‌ந்து விடுவார்.

நாங்கள் பேரன் பேத்திகள்  எல்லாரும் ஒரு பட்டாளமே அ‌ங்கு விடுமுறையில் கூடி வீடே களை கட்டி இருக்கும். 

இந்த மாமாவிற்கு சுமார் 70-75 வயது இரு‌க்கு‌ம்.

எல்லாரையும் வாடா போடா வாடி போடி என்று  விளிப்பார் .

அசட்டுத்தனமாக எதையாவது உளறி கொண்டே இருப்பார். 

அவரது பேச்சு வீட்டுப் பெண்களுக்கு  எரிச்சலை ஏற்படுத்தும் .

பொதுவாக “வாங்கோ” என்று ஒற்றை வார்த்தையில் எங்கள் பாட்டி “ணங்” காபி டவரா வை வைத்து விட்டு அவரது அதிருப்தியை வெளிப்படுத்துவார். மாமா அதையெல்லாம் சட்டை செய்யாமல் தன் குறிக்கோளில் வழுவாமல் இருப்பார். 

மேலும் வந்தமா 

காப்பியை குடித்தமா என்றில்லாமல் பெண் குழந்தைகளை வம்புக்கு இழுப்பார் .

எல்லாரயும் “என்னை கல்யாணம்பண்ணிக்கறயா டீ?” என்று கேட்டு அவர்கள் அழுவதை பார்த்து சிரிப்பது இவர் வழக்கம். 

பாட்டி அடுக்களைக்குள் இருந்து இவரை வசை பாடுவதும் “நாளையில் இருந்து காப்பி குடுக்க போவதில்லை ” என்று கருவுவதும் வாடிக்கை ஆகிப் போனது .

ஒரு நாள் வழக்கம் போல்  இந்த மாமா ஏதே கேள்வியைத் ennidam வீசி விட்டு சிரிக்கத் 

தயாரானார்.

7 வயதான நான் சற்றும் அதிராமல் “சரி தாத்தா ஆனா பாட்டிய எப்போ divorce பண்ணப்போற?” என்று கேட்க நிலை குலைந்த தாத்தா “இனிமே இந்த கேள்விய யார் கிட்டயும் கேக்க மாட்டேன் “,என்று

பிசிறிய குரலில் சொல்லி விட்டு கிளம்பினார். 

அடுத்த நாள் முதல் நோ   தாத்தா நோ ஓசி பேப்பர் and  நோ “ணங்”.

2

இதே பிஸ்மில்லா கானால் எனது தந்தை மறுபடியும் ஷாக்கான 

வடிவேலுவானார் . 

ஏ‌ற்கனவே சொன்னது போல பல வகை இசை எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் ஒலிக்கும்.  தொலைக்காட்சி இல்லா காலம் அது. Family time போன்ற நுண்ணறிவு எல்லாம் ஏட்டில் இல்லாமல்,  வாழ்க்கை முறையாக இருந்த ஒரு நிலாக்காலம். 

ஒரு நாள் என் தந்தை அலுவல் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பினார். 

எப்போதும் அவர் வரும் நேரம் எங்களுக்கு  உற்சாக நேரம். எதாவது ஒரு பொருள் எங்களுக்காக அவர் பையில் இருக்கும்.  நாங்களும் ஓடிச்சென்று பையை கீழே வைக்கும் முன் அவரது ஷூ அணிந்த கால்கள் மேல் எறும்புகள் போல ஏறி அதைத் திறக்க முற்படுவது வழக்கம்.ஒரு மாலை அப்பா வரும் போது நான் தென்படவில்லை. மற்ற இருவரும் வழக்கம் போல் பை ஆராய்ச்சியில் இறங்க,  திடீரென ஒரு அழுகை சத்தம் அப்பா 

காதுகளுக்கு எட்டியது. உடனே அவர்,” எங்கே உன் அக்கா? ஏன் அழுது கொண்டு இருக்கிறாள்?”, என கேட்க,  சிறிதும் சலனமில்லாமல் என் சிறிய தங்கை,” அதுவாப்பா? அக்கா shehnai பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கா”,என்று சொல்ல, அப்போது ஒரு மேதையின் இசைக்கு நேர்ந்த கதியை நினைத்து  வருந்தினாலும்,பின்னர் பல முறை,அது என் அப்பாவின் நேயர் விருப்பமாயிற்று.இன்று அப்பா இல்லை, நானும் shehnai பாடுவது இல்லை.

3

இதே போல இன்னொரு கதையும் உண்டு. இதுவும் பாட்டியின் வீட்டுக் கதை.18 வயதான என் சித்தப்பா பற்றியது.  அவரது அண்ணியாகிய என் அம்மாவிடம் மிகுந்த மரியாதையுடன் பழகுவார். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் அவர். 

இப்படி ஒருநாள் மதிய சிற்றுண்டி க்கு என் பாட்டி  தோசை செய்து கொண்டு இருந்தார். அன்று ஏனோ எல்லா தோசைகளும் கிழிந்த வண்ணமே இருந்தன.என் சித்தப்பா ஒன்று இரண்டு மூ‌ன்று நான்கு என்று விடாமல் தின்று கொண்டே இருக்க என் பாட்டி ஒரு கட்டத்தில், “இன்னும் எத்தனடா சாப்பிட போற?”  என சலித்துக் கொண்டார்.  

அதற்கு என் சித்தப்பா சற்றும் சளைக்காமல் “நான் தான் சிவ பெருமானாம், நீ தான் கிழவியாம்,கிழிஞ்ச தோசை எல்லாம் எனக்காம்,” என பாட்டியை வெருப்பேற்ற ஆரம்பித்தார். பாட்டிக்கு ஏற்கனவே தோசையுடன், தகறாறு. மேலும் இன்னும் 5  பேருக்கு, வார்க்க வேண்டிய pressure. கடுப்பில், சத்தம் போட ஆரம்பித்து விட்டார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அங்கு ஒரு கோலுடன்  வந்து,”நான் தான் வரகுண பாண்டியனாம், இதான் பிரம்பாம்,” என சிரித்துக்கொண்டே கம்பை ஓங்க, அங்கிருந்து நாலு கால் பாய்ச்சலில் ஓட்டம் பிடித்த சித்தப்பா இரவு உணவிற்கும் வரவில்லையாம்.

5

என் தந்தை ஒரு இசை பிரியர். பல விஷயங்களிலும் ஈடுபாடு உள்ளவர். சிறு  வயதிலிருந்தே எங்கள் எல்லாருக்குமே இசையில் நிறைய ஆர்வம் உண்டு.  சில சனி ஞாயிறுகளில் நாங்கள் எங்கள் பெற்றோருடன் அமர்ந்து இசை பயின்றதுண்டு .

எங்கள் தந்தை பல வகையான இசையை எங்களுக்கு அறிமுகம் செய்தார். இன்று எங்கள் வயதை ஒத்த வர்களுக்கு அறிமுகமில்லாத பழைய பாடல்கள் எங்களுக்கு அத்துப்படி. பி யு chinnappa, பாகவதர், மைசூர் ராஜா அய்யங்கார், பெங்களூரு  ரமணி அம்மாள், NC வசந்த கோகிலம் ,PA பெரியநாயகி, இன்னும் பலரது இசையை கேட்டு நாங்கள் வளர்ந்தோம்.

அப்பாவிடம் Record Players இருந்தது.  அவர் பல விதமான இசை தட்டுக்களை சேகரிப்பார். இவ்வாறாக அவ‌ரிட‌ம் கர்நாடக, ஹிந்துஸ்தானி , மேற்கத்திய இசை, வாத்திய இசை,திரைப்பட பாடல்கள் என நிறைய இருந்தன. இதை எல்லாம் வார‌ம் ஒரு நாள் எங்களுடன்,அமர்ந்து, பல பின்னணி கதைகளைச்சொல்லி , கேட்பது அவருக்கு வழக்கம். 

இப்படி இருக்க ஒரு நாள் எனது சிறிய தங்கை , (அப்போது அவளுக்கு ஒரு 5 வயது இருக்கும்), அப்பாவிடம் போய்,  சாயங்காலம் வீடு திரும்பும் போது,  ஒரு ஊதாங்குழல் வாங்கி வருமாறு கேட்டாள்.  அப்பாவும் எதுவும் சொல்லாமல் வாங்கி வந்து விட்டார். அதை அவர் கையில் இருந்து அவசரமாக பறித்த என் தங்கை, உடையை கூட மாற்ற விடாமல் என் அப்பாவிடம் கூறியது “சரி வாங்கி வந்துவிட்டீர்கள், இப்போது, பிஸ்மில்லா கான், பிளேட், போடுங்க.”

“எதற்கம்மா?”,என்ற என் அப்பா, “இது கூடவா தெரியல? சேந்து வாசிக்கப்போறேன்”,என்ற அவள் பதிலால் அப்படியே ஷாக்காயிட்டார்.

4

இன்னும் ஒரு விடுமுறை.  இன்னும் ஒரு பயணம். 

இந்த முறை என் அம்மாவின் பொறுமையை நான் எல்லைக்கே கொண்டு சென்று விட்டேன். இதே நிலைமை எனக்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ!

ஒரு உறவினரை சந்தித்து விட்டு பாட்டி வீட்டிற்கு பயணமானோம்.பேருந்து நிறுத்தத்தில் ஒரு வாடகை சைக்கிள் கடையில் சுமார் இருபது சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெகுநேரமாகியும் எங்கள் ஊர் செல்லும் பேருந்து வரவில்லை. என் அம்மா  பொறுமையாக எங்களை சமாளித்துக் கொண்டு இருந்தார்.

சைக்கிள்களின் அழகிய அணிவரிசை என்னை ஈர்த்த வண்ணம் இருந்தது.

பேருந்தும் ஒரு வழியாக வந்தது.நான் ஒரு நொடிப்பொழுதில், கடைசியாக நின்ற ஒரு சைக்கிளைத் தள்ள,

மடமடவென எல்லா சைக்கிள்களும், dominos போன்று ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்தன.

லுங்கியை உதறிக்கொண்டு எங்களிடம் பாய்ந்து வந்த கடைக்காரரைப் பார்த்து,பயத்தில் என் அம்மா உறைந்து அப்படியே நின்று விட்டார். அவர் நேரே என்னிடம் வந்து ,”எப்டி பாப்பா இந்த சின்ன கையால ஒண்ண  தொட்டு, அம்புட்டு சைக்கிளயும் விளவெச்ச? கில்லாடிமா ஓம்மவ.பாரு எப்டி ஒண்ணு போல வுளுந்து கெடக்குது,” என்று பெருமைப்பட, என் அம்மா பேருந்தில் எப்படி  அவ்வளவு வேகமாக ஏறினார் என்று அவருக்கே நினைவில்லையாம்.

5

இதுவும் பாட்டி வீட்டில் அடி‌க்கடி  சொல்லும் ஒரு கதை. 

தூரத்து சொந்த மான ஒரு பெண்மணியை அவரது கணவரும் மாமியாரும் மிகவும் கொடுமை படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

அந்த பெண்மணி ரொம்பவே சாது.  சூது வாது தெரியாது. 

என் தாத்தா வக்கீல் மற்றும் மு‌ற்போ‌க்கு‌ எண்ணமும் கொண்டவர் என்பதால் அந்த பெண்ணின் விதவை தாயாரும் தம்பியும்,  அவரை அழைத்து கொண்டு நியாயம் கேட்க சென்றனர். 

பெண்ணின் தம்பி அப்போது படித்து கொண்டிருந்தார்.  அவ்வளவாக வசதி இல்லாத குடு‌ம்ப‌ம்.  இரு‌ந்தாலு‌ம் அக்காவைப் பார்க்க போகிறோமே என்று பை நிறையப் பொருட்களை வாங்கி கொண்டு சென்றார்கள். பேச்சு வார்த்தை சுமுகமாக முடியவில்லை. அந்தப் பெண்ணின் மாமியார் என் தாத்தா உட்பட எல்லாரையும் அவமதித்து விட்டார். 

ஆத்திரமடைந்த இந்த பையனை என் தாத்தா அடக்கி விட்டு , சரி  வா போகலாம். பி‌றகு பேசலாம் என்று சமாதான படுத்த, மேலும் ஆத்திரம் அடைந்த  ,அ‌ந்த மாமியார் கிழவி, நீங்க கொண்டு வந்ததையெல்லாம் திருப்பி எடுத்துண்டு போங்க,” என்று கத்தினாள். 

உள்ளே நாலு கால் பாய்ச்சலில் சென்ற அந்தப் பெண் தன் தம்பியிடம்,  “இந்தா டா,  ரெண்டு கை இருக்கு,  ரெண்டு பை இருக்கு,” யென்று சொல்லி,  தானும் இரண்டு பைகளுடன் கிளம்பி விட்டாள்.  

இன்றும் அந்த முகம் அறியா மாமி எங்களுக்கு ஜான்சி ராணி தான்.

எங்களுக்கு ஒரு உறவினர் இருந்தார். உறவு முறை சரியாக தெரியவில்லை. எல்லாரும் அவர் பெயருடன் மாமா சேர்த்து அழைப்போம் .

விடுமுறையில் பாட்டி வீட்டில் அவர் தினமும் ஓசி பேப்பர் ம‌ற்று‌ம் காபிக்கு வ‌ந்து விடுவார்.

நாங்கள் பேரன் பேத்திகள்  எல்லாரும் ஒரு பட்டாளமே அ‌ங்கு விடுமுறையில் கூடி வீடே களை கட்டி இருக்கும். 

இந்த மாமாவிற்கு சுமார் 70-75 வயது இரு‌க்கு‌ம்.

எல்லாரையும் வாடா போடா வாடி போடி என்று  விளிப்பார் .

அசட்டுத்தனமாக எதையாவது உளறி கொண்டே இருப்பார். 

அவரது பேச்சு வீட்டுப் பெண்களுக்கு  எரிச்சலை ஏற்படுத்தும் .

பொதுவாக “வாங்கோ” என்று ஒற்றை வார்த்தையில் எங்கள் பாட்டி “ணங்” காபி டவரா வை வைத்து விட்டு அவரது அதிருப்தியை வெளிப்படுத்துவார். மாமா அதையெல்லாம் சட்டை செய்யாமல் தன் குறிக்கோளில் வழுவாமல் இருப்பார். 

மேலும் வந்தமா 

காப்பியை குடித்தமா என்றில்லாமல் பெண் குழந்தைகளை வம்புக்கு இழுப்பார் .

எல்லாரயும் “என்னை கல்யாணம்பண்ணிக்கறயா டீ?” என்று கேட்டு அவர்கள் அழுவதை பார்த்து சிரிப்பது இவர் வழக்கம். 

பாட்டி அடுக்களைக்குள் இருந்து இவரை வசை பாடுவதும் “நாளையில் இருந்து காப்பி குடுக்க போவதில்லை ” என்று கருவுவதும் வாடிக்கை ஆகிப் போனது .

ஒரு நாள் வழக்கம் போல்  இந்த மாமா ஏதே கேள்வியைத் ennidam வீசி விட்டு சிரிக்கத் 

தயாரானார்.

7 வயதான நான் சற்றும் அதிராமல் “சரி தாத்தா ஆனா பாட்டிய எப்போ divorce பண்ணப்போற?” என்று கேட்க நிலை குலைந்த தாத்தா “இனிமே இந்த கேள்விய யார் கிட்டயும் கேக்க மாட்டேன் “,என்று

பிசிறிய குரலில் சொல்லி விட்டு கிளம்பினார். 

அடுத்த நாள் முதல் நோ   தாத்தா நோ ஓசி பேப்பர் and  நோ “ணங்”.

One Comment on “வானவில் நாட்கள்/கனகா ரமேஷ்”

Comments are closed.