
இரவெல்லாம் எரிந்த குமிழ்விளக்கு
அணைக்கப்படாமல் பகல்வெளிச்சத்தில்
விழித்துக் கொண்ட அறையில்
மங்கலாய் ஒளிர்வதைப் பார்க்கையில்
இன்னும் என்னைவிட்டு அகலாத
அதிகாலை கனவாக தொடர்வதை
அமர்ந்தும் நின்றும்
கொஞ்சம் அப்பால் சென்று கவனித்தபின்
குமிழ்விளக்கை அணைக்கும் எண்ணத்துடன்
நெருங்கி சென்றேன் மின்வெட்டு சம்பவித்தது
தொடர்பில்லாத இடத்தை அடைந்து
எதுவென்ற தீர்மானமில்லாமல் தேடுவது போலானது
அங்கு
சரியாக தேதி தெரியவில்லை
கிழிந்தெறிந்த நாட்காட்டி ஏடுகளில்
இந்நாளும் ஓன்றாக இருக்கலாம்
அல்லது நாட்காட்டியிலிருந்து
அகற்றப்படாத ஒற்றை ஏடாகவே தொடரலாம்.
