
அவன் சிறுவனாக இருக்கும்போது
அவனுக்கென்று ஒரு உலகம் இருந்தது
அதில் மனிதர்கள் இருந்தார்கள்
அவனுக்கென்று ஒரு பிரத்தியேகமாக
கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்
இயற்கை காலம் பொழுது
கரையும் நேரம் மாரும் திசைகள்
ஒவ்வொரு தினமாக
மெல்ல மெல்ல எண்ணி எண்ணி
செலவழித்துக் கொண்டிருந்தான்
அவனுக்கு இப்பொழுது வயதாகி விட்டது
அவன் ஆற்றில் அடித்துச் செல்கிறான்
அவன் மிதந்து போகிறான்
எதிர்காலம் சுருங்கிப் போய்
நிகழ்காலம் கசக்கிறது
அகத்தில் அழியும் நினைவுகளிலிருந்து
வார்த்தைகள் வர மறுக்கிறது
தவறி விடப்பட்ட
தொலைந்த பொருள்
கிடைத்தது போல்
இருந்தான் அவன்
