வரிசை/அழகியசிங்கர்

வரிசையாக நின்றார்கள் பலமணிநேரம்
ஆனால் வரிசை குலைந்து போயிற்று
வரிசையைக் கட்டுப்படுத்த காவலாளிகள்
தென்பட்டார்கள்

கூட்டம் முண்டியடித்து நின்றது
கூட்டத்திற்கு நேரம் கூடக் கூட பரபரப்பு
வரிசை சிதைந்து சிதைந்து திரும்பவும்
வரிசையாயிற்று

பெரிய கேட்டைத் திறக்கும் சப்தம்
காவலாளிகள் கட்டுக்குள் அடங்காத கூட்டம்
எல்லோரையும் உருட்டித் தள்ளி
எல்லோர் மீதும் ஏறி ஏறிப் பறந்தார்கள்.
சில காசுகளைப் பெறுவதற்கு
கூட்டத்திலிருந்தவர்கள்
தயாராக இருந்தார்கள்
கூட்டத்தின் கோரப்பிடியில் சிக்கிய இன்னும் சிலர்
எதிர்பாராமல் மரணமடைந்தார்கள்.  
     சிலர் காயமடைந்தார்கள்.  
                  எல்லோரும் அழுதார்கள்.
ஹோ என்று கூட்டத்தின் சப்தம் எங்கும்
வாரி இறைத்தபடி இருக்கிறது