குறுங்கவிதைகள்/ஜான்னவி

1)

வளையினுள் ஒளிந்திருக்கும் எலி.
வளையின் வெளியே
பொறுமையாகப்
பூனை.

 🦋  🦋  🦋

2)
தான்
எத்தனை
எம்பினாலும் எட்டாத நிலா
தண்ணீருக்குள்
நிலவைக்
கலைத்து விடும்
தென்னை.

   🦋  🦋  🦋

3)

கதவைத் திறக்க
இயலாமை.
அவன் உரத்த குரல்
வீடு முழுதும் முட்டி
மோதித் திரும்புகிறது
அவனிடமே

🦋  🦋  🦋

4)

பிறர் கேளாமல்
கூறப்பட்ட
ரகசியம்
உலகெங்கும்
ஒலிக்கிறது
காற்றின் குறும்பினால்

  🦋   🦋  🦋