கிரிக்கெட்/அழகியசிங்கர்

சிலர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
பலர் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்
ஹோ ஹோ
என்று சத்தம் போடுகிறார்கள்
பந்து சுழன்று சுழன்று
வீசப்படுகிறது
வெற்றிபெற்ற வீரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்
பெண்கள் உற்சாகத்தில்
தங்கள் மேலாடையைத்
தவற விடுகிறார்கள்
நீங்கள் அடுத்த விளையாட்டிற்குத்
தயாராக உள்ளீர்கள்
விளையாட்டு தொடர்ந்தவண்ணம்
இருக்கிறது
பார்வையாளர் யாரும்
இதில் வெற்றி பெறவில்லை