
சேலம் தமிழ்ச்சங்கம் இங்கிருந்துதான் தன்னை விரிந்த கட்டிடமாக உருவாக்கிக்கொண்டது.
அதற்கு வித்திட்டவர் தமிழ்ச்சங்க நிறுவனர் இரா. வை கணபதி அவர்களின் அன்புக்கு உரியவரும் நண்பருமான அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.
சேலத்திற்கு அடுத்த முறை வரும்போது இரா. வை. கணபதி அவர்களது பெயரில் கட்டிடம் இருக்கவேண்டும். அதை நான் வந்து திறப்பேன் என்று அவர் தந்த இடம்தாம் இன்றுள்ள சேலம் தமிழ்ச்சங்கம்.
அதன் பெயர் இர. வை. கணபதி நினைவு மண்டபம்.
ஆனால் அவர் உருவாக்கிய சேலம் தமிழ்ச்சங்கம் அங்கிருந்து செயல்பட வேண்டும் என்று கலைஞரோடு இணைந்து பங்காற்றியவர்கள் திரு. க . இராசாரம் அவர்களும் திரு. ஈ. ஆர். கிருஷ்ணன் அவர்களும்தான்.
இன்று அந்த தமிழ்ச்சங்கம்
நான் கோவைக்கு வந்த பின்பு
குறுகி
பேச்சு மண்டபமாகி…
இப்போது அதிகார போட்டிக்கான இடமாகிவிட்டது.
உண்மையான இலக்கியப் பணியை இன்றுள்ளவர்கள் தெரிந்துகொள்ள நான் செயலாளராக பணியாற்றிய நிகழ்வுகளைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இரா. வை. கணபதி அவர்களின் கனவு…
கலைஞரின் இலக்கியக் கொடை…
இராசாராம்… ஈ. ஆர். கிருஷ்ணன் அவர்களின் தளர்வற்ற பணி எல்லாம் இன்று வீணாகிவிட்டன.
தமிழ்ச்சங்கத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளாமல் போனால்
கலைஞரின் இலக்கியக்கொடை
அழிந்து
தனிமனிதர்களின் அதிகார மையம் ஆகிவிடும்.
முதல்வர் ஸ்டாலின்
நேர்மையும்
இனப்பற்றும்
உண்மையும் மிக்கவர்.
தந்தையின் பணி அழியாதிருக்க
சேலம் தமிழ்ச்சங்கத்தை
அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர
உடனே முடிவெடுக்க
எழுத்தாளன் என்ற முறையில் உரிமையோடு வேண்டுகிறேன்.
சங்க நிர்வாகத்தை வியாபாரிகளிடமிருந்து மீட்டு சேலம் மக்கள்
தமிழ் மக்கள்
படைப்பாளிகள்
பங்கேற்கும் வகையில்
எழுத்தாளர்கள் வசம்
அரசு மேற்பார்வையில் ஒப்படையுங்கள்.
இடத்தை சங்கத்திற்கு கலைஞர் வழங்கியபோது வருமானம் ஈட்டும் செயல்களைச் செய்யக்கூடாது என்றுதான் வழங்கப்பட்டது.
சேலம் தமிழ்ச்சங்கம்
இனி
இலக்கியச் செயல்பாட்டாளர்களின் மையமாக
மாற
அரசு உடனே செயல்பட அன்போடு வேண்டுகிறேன்.

நான் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த பொழுது தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை கவனித்து இருக்கிறேன். நகரின் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இச்சங்கம் நிச்சயமாக தன்னுடைய பழைய பொலிவை பெற்றாக வேண்டும் இன்று ஆசிரியர் கூறும் கருத்து எனக்கு ஏற்புடையதே.