
திரும்பிப் பார்த்தபடி
நடக்கிறாள்
நம்பிக்கையான பேச்சுத் துணை
ஆட்டுக்குட்டியை
வழி நெடுகப்
பேசிக் கொண்டே வருவாள் –
தான் வாழ்க்கைப் பட்ட கதையை
வறுமையை உறிஞ்சி உறிஞ்சித்
தாகம் தணித்துக் கொள்ளும் கதையை
மறந்தே போன
பட்டென்று மின்னல் வெட்டாய்த் தோன்றி
மறைந்த காதல் கதையை
அவள் பேசப் பேசத்
தானும்
அவளுக்காகவே
கனைத்துக் கொண்டே நடக்கிறது
அவளின் அன்பான
ஆட்டுக்குட்டி


மனதில் உள்ளதைக் கொட்ட ஒரு இடம் (ஆட்டுக் கூட்டம்) கிடைத்ததே.
நல்லது தான்.
குறுங்கவிதையாயினும் ஆட்டுக்குட்டி கவர்ந்து விட்டது.
“வறுமையை உறிஞ்சி உறிஞ்சித்
தாகம் தணித்துக் கொள்ளும் ” கவிதை அபாரம் கவிஞரே!
மறுப்பேதும் பேசாதவை அவளின் ஆட்டுகுட்டிகளே கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவாள்
எளியவரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் எளிமையான கவிதை..வாழ்த்துக்கள் தோழர் வேணு
வறுமையையும் காதலையும் இணைத்து புனைந்த கவிதை, ஆடு போல் பின் தொடர்கிறது.