வாசிப்பது வீண்/ஜெயமோகன்

வாசிப்பது வீண்/ஜெயமோகன்

இன்று வாசிக்கத் தொடங்குவதுதான் கடினம். நம் சூழலில் வாசிப்புக்கு எதிரான மனநிலைகள் நிறைந்துள்ளன. வாசிப்பது வீண், வாசிக்காமலேயே அறிவு வரும், இப்போதெல்லாம் யாரும் வாசிப்பதில்லை, சீரியல்களை பார்த்தாலும் அறிவு பெருகும், டெக்னாலஜி வந்தபின் வாசிப்பே தேவையில்லை — இன்னபிற பிலாக்காணங்கள் இங்கே பெருகியிருக்கின்றன. ‘நானெல்லாம் வாசிக்கிறதே இல்லை’ என்பதையே ஒரு பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களை வேறெங்கும் பார்க்கமுடியாது.

இது வாசிக்க நினைப்பவர்களை பின்னடையச் செய்கிறது. தங்களால் வாசிக்க முடியாது என எண்ணச் செய்கிறது. அத்துடன் பலவகையான திசைதிரும்பல்கள். ஐந்து நிமிடத்துக்கு ஒரு குறுஞ்செய்தி. அரைமணிநேரத்துக்கு ஓர் அழைப்பு. ஓயாமல் எவராவது அழைத்து எதையாவது சொல்ல்க்கொண்டிருப்பதை எங்களூரில் நொச்சு பண்ணுவது என்போம். எங்கள் இளமையில் நொச்சு பண்ணும் ஆட்களைக் கண்டு ஓடி ஒளிவோம். இன்று நொச்சு பண்ணிக்கொண்டே இருக்கும் கருவியை கையிலேயே வைத்திருக்கிறோம்

இதேபோல ஏதேனும் போட்டியில் கலந்துகொண்டு படிக்க ஆரம்பிப்பவர்கள் தங்களால் மிக எளிதாக படிக்க முடியும் என, அதில் அவ்வளவு தீவிரமாக ஈடுபட முடியும் என கண்டுகொள்கிறார்கள். அதன்பின் அச்சுவை அவர்களை ஆட்கொள்கிறது. அப்படி வாசிக்க ஆரம்பித்த பலரை நான் அறிவேன்.

தகவல் :ஆர் கந்தசாமி

One Comment on “வாசிப்பது வீண்/ஜெயமோகன்”

  1. தவறான தலைப்பு மற்றும் பதிவு.
    இன்றைய பிலாக்கணங்களில் ஒன்றாக கூறப்பட்டதை தலைப்பாக அளித்து தவறான ஒரு கண்ணோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது

Comments are closed.