அலைமோதும் நிலா/செல்விபிரகாஷ்

கிணற்றில் விழுந்த நிலா
நிலைத்தடுமாறிப்போக காரணம்
கற்பிப்பது
நீருடன் விளையாடிய காற்றோ?

ஓடி வந்து துள்ளி குதித்தபடி மனதில்
துள்ளும் ஆசையில் அச்சிறுவன் எரிந்த
கல்லோ?

அலைஅலையாய் மோதி தன் கதையை
சுவற்றின் காதில் கதைத்துப்போகும்
கிணற்று நீருக்கு மட்டும் சாத்தியமாகிறது
நிழலின் பிம்பமாய் சுடர்விட்டெரியும்
அந்த நிலாவை தழுவுவதெப்படியென்று

தப்பிக்கும் மீனாய் வழுவழுத்து
தவித்துப்போகும் பிம்பம் தன் நிலையை
எப்படித்தெரிவிக்குமோ அந்த நிஜத்தின்
வான் நிலவுக்கு?

விடாமல் தன் நிழலை உதிர்த்து நீரை
மோகத்திற்கு உட்படுத்த அந்த நிஜத்தின்
நிலவுக்குத்தான் என்ன நிர்பந்தமோ?

    🌹