நிலா நிலா ஓடி வா../அழகியசிங்கர்

பெரும்பாலும்
நான்
நிலாவை
இப்போதெல்லாம்
பார்ப்பதில்லை

பொய்யாய் கதை சொல்ல விரும்பவில்லை

எல்லாருடைய கவிதைகளிலும்
விரகதாபம் கொப்பளிப்பது
கண்டு
திகைக்கிறேன்

ஏன் பொய்யாய்
எழுதுகிறார்கள் என்று
கேட்கத் தோன்றுகிறது
யாருடைய கண்ணுக்கும்
தோன்றும் நிலா
ஒன்றும் சொல்வதில்லை
ஆனால்
உங்கள் புரூடா கவிதை
வரிகளை அறிந்து
அது திகைக்காமலிருப்பதில்லை