வாசல்/        புஷ்பால ஜெயக்குமார்

எல்லாம் எதோ ஒன்றைச்  

சொல்ல முற்படுகிறது 

நான் அதனுடன் இல்லை

இந்த  இறக்கமற்ற காலம் 

என்னை ஏமாற்றுகிறது 

என்னை நானே 

ஏமாற்றிக் கொள்ளும்போது

கால்கள் இல்லாமல் நடக்கிறேன் 

நீரில்லாமல் மூழ்கிப் போகிறேன் 

கற்பனை கிட்டாத நேரத்தில்

காத்திருப்பின் இடத்தில்

என்னை நானே 

அழைத்துக்கொண்டு போகிறேன் 

என்னிடம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

ஒரு சுமையை நான்

இழுத்துக் கொண்டு செல்கிறேன் 

சலிக்கும் பாதையில்

விதியின் திருப்பத்தில்

வரும் வாசல் வழியாக

நான் வெளியே வந்தேன்