அழுகை வருகிறது்/அனங்கன்

அன்புபொங்கும் போதெல்லாம் அழுகை வருகிறது…
வெட்கம் அதனை மூடிமறைக்க கைகள் நீள்கிறது.

துளிர்க்கும் நீரில் மனம் கரைந்து கண்கள் பணிக்கிறது…
எவ்வுயிராயினும் அன்பால்
நம்முள் மனிதத்தை விதைக்கிறது.

கேட்டுப்பெறுவது அன்பில்லையென்றால்
கொடுத்துப்பழகுவது…

கொடுக்க…கொடுக்க வளரும் அதனை மனிதம் தொட்டிச்செடியாய்
வளர்க்கிறது…

உலகம் அன்புப் பெருவெளிதான்
எல்லைகள் பிரிக்கிறது…
உன்னிடம் கனியும் சிறகிருந்தால் …
அது உடைபட்டுப்போகிறது.


♦.

2 Comments on “அழுகை வருகிறது்/அனங்கன்”

Comments are closed.