நளிர்கடல் என்னும் மாது

சின்ன சீறா என்னும் நூலில் பனீஅகமது மரைக்காயர் கடலை ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். எப்படி என்றால் முத்தை பற்களாகவும் செந்தாமரை மொட்டுகளை மார்பகங்களாகவும் பாசிக் கொத்தை குழலாகவும்(முடி), கொடிகளை விரல்களாகவும், சங்கைக் கழுத்தாகவும் கொண்ட கடல் என்னும் பெண் நடனம் செய்கிறாள் என்ற பொருளில் வரும் பாடல் இங்கே:
“முத்துஎனும் எயிறும் செந்தா
மரைமுகை முலையும் பாசிக்
கொத்தெனும் குழலும் துப்பின்
கொடியெனும் விரலும் பேழ்வாய்
நத்துஎனும் களமும் கொண்ட
நளிர்கடல் என்னும் மாது
சித்திரத் திரைக்கை காட்டிக்
காலினால் நடனம் செய்தாள்.”
