
பாதி கிணறு தாண்டிய பின் மிச்சத்தைக்
கற்பனையில் தாண்டுவதுதான் இலக்கி
யம் என்பது க.நா.சு வின் கட்சி.இந்த அபி
ப்ராயம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்
என்று நம்பினார்.இவருக்கு வாசகர்கள்
குறைவு என்ற எண்ணிக்கை அளவு கோ
ல்களைக் கடுமையாக எதிர்த்தார்.ஒரு
ஏழெட்டுப் பத்து இலக்கியக்காரர்களைத்
தான் க.நா.சு வால் ஒத்துக்கொள்ள முடிந்
தது.ஆர்.சண்முகசுந்தரத்தை ஓயாமல்
கொண்டாடினார்.நல்லஎழுத்தை அடிக்கடி உரத்துச் சொல்லவேண்டும். இன்றேல்
காணாமலடித்துவிடுவார்கள் என்றார்.
ஆர்தர் கெஸ்லரின் “நண்பகல் இருட்டு”
பற்றி அடிக்கடிப்பேசுவார்.ஆந்த்ரே ழீடு
எழுதிய ‘குறுகியவழி’யை மொழிபெய
ர்த்தார்.ழீடு நடையை மொழிபெயர்ப்பது
கடினம்.அதை எனக்கு எட்டியவரையில்
செய்திருக்கிறேன் .எந்த இலக்கியமொழி
பெயர்ப்பும் ஒரளவுக் குறிக்கோள்களை
எட்டமுடியாதுதான்.நூலின் சாராம்சம்
சிறிது வந்துவிட்டாலேபோதும்விட்டுவிட
வேண்டியதுதான்என்பது க.நா.சு கருத்து.
இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பையும்
வளத்தையும் குறிப்பிட்டுக்காட்டும் முய
ற்சி கடினமானது என்பதை அறிவேன்.
அதற்காகப் பேசாமலிருந்துவிடமுடியாது.
என்றார்.இலக்கியத்தரம், அளவுகோல்
கள் பற்றிச் சிந்திக்கவே மறுப்பது வளர்
ச்சிக்கு உதவாது.பழைய இலக்கியங்கள்
பற்றியும் இலக்கியத்தரமான அளவுகோ
ல்கள் இனிமேல்தான் ஏற்படவேண்டும்
இன்னும் அவை நிர்ணயம் செய்யப் பட
வில்லை என்பது அவருடையமனக்குறை.
ரசனை அனுபவம்தவிர வேறு எதுவுமே
எனக்கு முக்கியமாகப் படவில்லை என
அழுத்தமாகப்பேசுவார்.
நவீன இலக்கிய யுகம் என்று க.நா.சு
அறிமுகப்படுத்தியபிறகே புரிபட ஆரம்
பித்தது.அவரைப் பெரிய இலக்கியவாதி
என்றுகொண்டாடாவிட்டால் நஷ்டமில்
லை.அவரும் விரும்பியதில்லை.கிரியா ஊக்கி என்பது சரியா இருக்கும்.
