வாழ்க சக்தி

பானுமதி ந

மும்மலத்தை நீத்தருளும் முத்தமிழே நீ வாழி!

முக்காலம் தாள் பணியும் முத்துமாரி நீ வாழி!

நித்திலங்கள் தோற்றுவிக்கும் நித்திலமே நீ வாழி!

நீக்கமற நிறைந்திருக்கும் வெண் சங்கே நீ வாழி!

முகில் தழுவும் இமயத்தின் மென் பிடியே நீ வாழி!

தாள் பணியும் அன்பர்க்கு அமுதமே நீ வாழி!

கற்கண்டே! கண்மணியே! கரும்பே! நீ வாழி!

கருணையே! பைங்கொடியே! பொன்மணியே! நீ வாழி!

One Comment on “வாழ்க சக்தி”

Comments are closed.