
நாத்திகம் பேசிக் கொண்டிருந்த சுந்தரத்தை மதுரை ஆடி வீதியில் அமர்த்தினான் சேகர். இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ‘பக்திச் செல்வி ‘ பார்வதியின் உரை .கும்பிடச் சொல்லும் தோற்றத்தோடு அவள் அங்கே வரும் போதே எழுந்து நின்றவரில் சுந்தரமும் ஒருவன்
‘நமச்சிவாய வாழ்க’ என்று ஆரம்பித்த இனிய குரலில் ஆழ்ந்திருந்த சுந்தரத்தை ‘ முடிந்தது உரை, ‘ என்று எழுப்பினான் சேகர் .ஏதோ ஒரு இடத்தில் எங்கோ சென்றது ஞாபகம் வந்தது.
‘ அடுத்து இவங்க சொற்பொழிவு எங்கே ‘ , அந்தக் குரலைக் கேட்பதே வேலையாய்க் கிடந்தான் சுந்தரம் . ‘ என்னென்னே புரியலேடா , இது பக்தியா, தெரியலே, ஒரு நாள் கேட்காட்டாலே பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிடுறேண்டா ‘ .
சுந்தரத்தைச் சோமசுந்தரர் சன்னதி முன் நிறுத்தி , ‘வேண்டிக் கொள் இப்படி ‘ என்று சேகர் சொன்னதைச் சொன்னான்.
“ஆண்டவனே, என்னை நாத்திகனாகவே இருக்க விடு ,” கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.
