சில நேரங்களில் பல மனிதர்கள்.. /-ஜெய விசாலாட்சி.

வாழ்க்கை அனுபவங்கள் – 2

ஏழு வருடம் முன்பு எனக்கு ஒரு பதவி உயர்வு கிடைத்தது. அப்போது பதவி உயர்வு கிடைத்தவர்கள் கிராம வங்கிக்குச் மாற்றல் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டும். வீட்டிலிருந்து சென்று வரும் வகையில் மாற்றல் வாங்கிக் கொள்ள உத்தேசித்து இருந்தேன். அப்பொழுது ஒரு கிராம வங்கி கிளையின் மேலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை அந்த வங்கிக்கு போஸ்டிங் வாங்கிக் கொள்ளும் வகையில் பல செய்திகளை ஈர்க்கும்படி சொன்னார். உடனே நான் என்னுடைய மண்டல மேலாளரிடம் சென்று அந்த குக்கிராம வங்கி கிளைக்கு நான் மாற்றல் பெற்றுக் கொண்டு செல்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் நன்றாக யோசித்தீர்களா என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் எனக்கும் மாற்றல் கொடுத்தார்.

பழைய மேலாளர் சொன்னதும் நடந்ததும் என்னவென்றால் உங்கள் வீட்டின் அருகில் பஸ் ஏறிப் கொள்ளலாம் அலுவலகத்தின் அருகில் இறங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த ஒரு   பஸ்சுக்காக அந்த வங்கி ஊழியர்கள் அனைவரும் காத்திருப்போம். தனுஷ் பட வசனம் போல் அந்த பஸ் வரும் ஆனா வராது.

நாங்கள் அனைவரும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனபின்னும் நின்று கொண்டிருப்போம். பிறகு வரவே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாற்று ஏற்பாடு செய்து வங்கிக்கு செல்வோம். சில நாட்களில் குறித்த நேரத்தில் பஸ் வரும் ஆனால் 25 கிலோமீட்டர் இரண்டு மணி நேரம் செல்லும். அந்த ஓட்டுனர் அவ்வளவு வேகம்…

அந்த குக்கிராமத்தில் ஒரு டீக்கடை கூட கிடையாது. பிறகுதான் நான் புரிந்து கொண்டேன் அந்த கிராம கிளைக்கு ஊழியர்கள் யாரும் எளிதில் வர மாட்டார்கள்..  அந்தப் பழைய மேலாளரின் சதி அப்போதுதான் விளங்கியது..

அவ்வப்போது அரசாங்க பஸ் வரும்.  மொத்த கும்பலும் இறங்கி வங்கியில் பரிவர்த்தனை மேற்கொள்வார்கள். பஸ் திரும்ப வருவதற்குள் நாங்கள் அவர்களுடைய எல்லா பரிவர்த்தனைகளையும் முடித்துவிடவேண்டும் அடுத்து இன்னொரு கிராமத்தில் இருந்து ஒரு அரசாங்க பஸ் கும்பலாக மக்களை இறக்கிவிட்டு செல்லும்.

இவ்வாறு எங்கள் பணி போய்க்கொண்டிருக்கும். அப்பொழுது திடீரென்று அரசாங்கம் அறிவித்தது Demonitisation. தாங்கவே முடியாத அளவுக்கு கூட்டம் அந்த சிறிய வங்கி இந்த கூட்டத்தை தாங்க முடியவில்லை சில விஐபி  வாடிக்கையாளர்கள், வயோதிகர்கள் மற்றும் குழந்தை வைத்திருக்கும் பெண்கள் ஆகியவர்களுக்கு நான் ஸ்பெஷலாக உதவி செய்வேன். காசாளர் இடமிருந்து கொஞ்சம் பணம் பெற்று இவர்களுக்கு பட்டுவாடா செய்தேன் இதனை புரிந்து கொண்ட சில வாடிக்கையாளர்கள் வெளியே பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள் போலும் இந்த மேலாளர் அம்மா பெண்கள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்றால் சீக்கிரம் பரிவர்த்தனை செய்து கொடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வரிசையாக பெண்கள் வருகிறார்கள் குழந்தையுடன் முதல் இரண்டு முறை நான் கூட்டத்தில் சரியாக கவனிக்கவில்லை மூன்றாவது நான்காவது முறை குழந்தை என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டது ஏனென்றால் அதே குழந்தையை வேறு வேறு பெண்களுடன் அடுத்தடுத்து வருகின்றது.😄

ஒரு முறை கடன் வசூல் செய்ய நானும் விவசாய அதிகாரியும் உள்ளே இருக்கும் சிறு சிறு கிராமங்களுக்கு சென்றோம். விவசாய அதிகாரி சிறு வயது பெண் பணம் கட்டாதவர்கள் பார்த்தால் கோபமுடன் கத்துவார். முதலில் நான் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி விட்டு பிறகு வாராக்கடன் வாடிக்கையாளருடன் பொறுமையுடன் உரையாடுவேன். அப்போது ஒருமுறை கீதா என்ற பெயருள்ள வாராக்கடன் வாடிக்கையாளரை பார்த்து விவசாய அதிகாரி தாறுமாறாக சத்தம் போட்டார் நீங்கள் பணம் கட்டவில்லை உங்கள் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார் தூதரகத்தில் அறிவித்து விடுவோம் என்று அரை மணி நேரம் மிரட்டிய பிறகு அந்தப் பெண் மிக அமைதியாக நீங்கள் தேடி வந்த கீதா 2வது தெருவில் வசித்து வருகிறார் என்று கூறினார்.

தப்பான ஆளை தாறுமாறாக திட்டி விட்டோம் என்று தெரிந்ததும் நாங்கள்  ஜூட்.. தலை தெறிக்க ஓடி வந்து விட்டோம்..

One Comment on “சில நேரங்களில் பல மனிதர்கள்.. /-ஜெய விசாலாட்சி.”

  1. கள்ளம் கபடம் இல்லா குழந்தை தன்னைப்போல் இருந்த வளர்ந்த குழந்தையைப் பார்த்து சிரித்தது

Comments are closed.