நிர்மல் ஒரு சாதாரண மனிதன்.
‘சாமியாவது பூதமாவது’ என்பான்.
அன்று வரை.
அன்றொருநாள், ஒரு சாமியார் அவன் தலையில் கைவைத்தார்.
மின்சாரம் தாக்குவது போலிருந்தது.
தெய்வத்தை கண்டது போல இருந்தது।
அன்று தன் நண்பனிடம் ‘உனக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்” என்றான்.
கிடைத்தது.
அருகிலிருந்த பெண்மணி, குழந்தையுடன் சாலையைக் கடக்கும் போது,
‘நில். ஆபத்து’ என்று நிறுத்தினான்.
சாலையின் பெரியவிபத்து.
‘ஆண்டவனே நான் நினைப்பதெல்லாம் நடக்கிறதே!’ .
அன்று மாலை, சாலையோரத்தில், ஒரு முரடன் ஒரு பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுத்தான்.
‘நீசனே. உனக்கு சாவு உடனே வரும்’ என்ற வார்த்தைகள் நிர்மல் வாயிலிருந்து உதிர்ந்தது.
அது நடந்தது. ஒரு தண்ணி லாரி முரடன் மீது மோதி அவனைக் கொன்றது.
நிர்மல் அதிர்ந்தான்.
நான் ஏன் அப்படிப்பேசினேன்?
எனக்கு எந்த தெய்வச்சக்தியும் வேண்டாமே!
சாதாரண மனிதனாகவே இருந்திருக்கலாமே!
“ஆண்டவனே! என்னை நாத்திகனாகவே இருக்கவிடு!” கண்ணில் நீர் மல்க வேண்டிக்கொண்டான்.
-யாரோ
குவிகம் 100 வார்த்தைக் குறுங்கதைப்போட்டி
