நிலம் எனும் நல்லாள்/iசா

ஹலோ பிரதர்

யார் பேசறது?

நான் மண் பேசறேன்

என்ன மண்ணா?

ஏன் பேசக்கூடாது? உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் பேசும் அலெக்ஸா பேசும் நான் பேசக் கூடாதா?

அது சரி. பேசு. அது ஏன் என்னோட பேசணும்?

காரணம், நீ என் மீது வைத்துள்ள வாஞ்சை.

மகிழ்ந்தேன். நீ பேசு…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி… ம்ம்ம்ம்… எனக்கு உடன்பாடில்லை… பரவாயில்லை.. ஏதோ அறிஞர்கள் கற்றவர்கள் சொல்லி விட்டனர்.. இருந்தாலும்…

இருந்தாலும்?

உங்களுக்குள் நீங்கள் வசைபாடிக்கொள்ள நான் தான் உங்கள் வாயில் அகப்பட வேண்டுமா?

புரியலையே?

சாப்பாடு சரியில்லை என்றால் என்ன சொல்கிறீர்கள்?

நல்லா இல்ல. சகிக்கல.. வாயில வைக்க முடியல..

அப்புறம்?

வேறெதுவும் இப்போ யோசிக்க முடியல… நீங்களே சொல்லுங்க..

மண்ணு மாதிரி இருக்குனு சொல்லரீங்க இல்ல.. அது எனக்கு பிடிக்கல. மழை பெய்தால் என் வாசனை ஊர் அறிவர். சாக்கடையில் பெய்தால் அதன் மணத்தையும் ஊர் அறியும்.

சரி.. அப்புறம் என்ன? சொல்லுங்க.

ஒருத்தனுக்கு ஒரு விஷயம் சட்டுனு புரியலைனா என்ன சொல்லி திட்டரீங்க?

மக்கு, டியூப்லைட் உதவாக்கரை, மந்து, ஆஆங்… மரமண்ட…

இல்ல நீங்க அவன, மண்டயில என்ன களி மண்ணா வச்சிருக்கனு தான கேக்கறீங்க? களிமண் உங்களுக்கு அவ்வளவு கேவலமா? அப்புறம்.. அது என்ன “மண்ணு திங்கப்போற உடம்பு
தான?” நானா புதைக்கச் சொன்னேன்?

புரியுது. நாங்க என்னவெல்லாம் செய்யக் கூடாது? சொல்லுங்க நிலமகளே.

அதை சொல்ல அவகாசம் இல்லை. என்ன செய்யலாம்னு மூணு விஷயங்களை சொல்லறேன். அதை முதலில் கடைபிடியுங்க.

சரி, சொல்லுங்க பூமா தேவி.

  1. என்னை நேசியுங்கள்

என் மீது கடப்பாரையை போடும் முன், என்னை ஆற்றிலிருந்து அள்ளும் முன், என் மீது இரசாயன உரங்களை போடும் முன் எனக்கும் வலிக்கும் என்று உணர்ந்து செயல்படுங்கள்.

  1. என்னை பூஜியுங்கள்

என்னை பூமா தேவி, நிலமகள் என்று அழைதாய் அல்லவா? என்னை அலங்காரம் செய்யுங்கள். என் மீது கோலம் போடுங்கள். என் மீது பூ சூட்டுங்கள்.

  1. என்னுடன் வாஞ்சயுடன் பழகுங்கள்

என் மீது குப்பைகளை போடாதீர்கள். என் மீது எச்சில் துப்பாதீர்கள். மனிதக் கழிவுகளை நான் உரமாக்கித் தந்தேன். பிளாஸ்டிக் கழிவுகளை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மூச்சு தினருகிறேன்.

செய்கிறோம்.

இன்னும் உன்னுடன் நிறைய பேச ஆசை. அவகாசம் இல்லை. வருகிறேன்..

2 Comments on “நிலம் எனும் நல்லாள்/iசா”

  1. நல்ல குறுங்கதைதான் என்றாலும்கூட இன்னுங்கொஞ்சம் பெருசா கோபப்பட தெரியாத மண்ணா இருக்கே. ஏன் நன்றாக சாடியிருக்கலாமே?

Comments are closed.