
அன்று பார்த்த அலை
தொலைவிலும் இல்லை
காலருகிலும் இல்லை
இடைப்பட்ட தூரத்தில்
முன்வளைந்து வருவதைப் பார்த்தேன்
இன்று பார்க்க வந்தேன்
சற்று அப்பாலொரு அலை
மேலெழும்பி வீழ்ந்தது
அதன்பிறகு திரும்பிவிட்டேன்
இன்னொரு நாள் வரவேண்டும்
காலுரசி நுரைமெழுகிச் செல்லும்
சிற்றலையின் முன் நின்றுவிட்டு
நனைந்த பாதங்களுடன்
விரலிடுக்கில் உவர்மணலுடன்
வந்தவழியே திரும்ப வேண்டும்
எதையும் ஞாபகத்தில் இருத்தாமல்.
