குதிரை வால்/வாசுதேவன்

குதிரை வால் என்ற மோஸ்தர் அபத்த களஞ்சிய திரைப்படம்…

இந்தப்படத்தின் முதல் டைட்டில் இப்படி வருகிறது…பிரம்மராஜன், நாகார்ஜூனன், கோணங்கி, ரமேஷ் பிரதேன் நண்பர்களுக்கு நன்றி.

முகநூலில் அவ்வபோது மோஸ்தராக எழுதும் இளவட்டங்கள் உண்டு. பின் நவீனத்துவ கதை, கட்டுடைப்பு, மாய எதார்த்த எழுத்து என போகிற போக்கில் எழுதி தங்களுடைய‌ தலைக்கொம்புகளால் முட்டுவார்கள். இந்தப் படம் அதே ரகம். காஃப்காவின் ‘உருமாற்றம்’ கதையில் கிரொகரி சமேசா காலையில் எழும்போது கரப்பான் பூச்சியாக மாறுவான். இதே போல் இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு வால் முளைத்துவிடும்.(பிரமை). அதற்குப்பிறகு மனம் பிறழ்ந்த நிலையில் சகட்டுமேனிக்கு படத்தை எடுத்துள்ளார்கள். படம் முழுவதும் பெயர் உதிர்ப்புகள். தலையை சுற்றும் அளவுக்கு அவியலாக அள்ளித் தெறித்துள்ளார்கள். ஃபிராய்ட் , லக்கான் மிரர் தியரி, விவால்டி இசை, மோன்டரின் ஓவியம், போர்ஹெஸ், மஹாபாரதம், நீலி தொன்மம், கனவு,நனவு என சகட்டுமேனிக்கு உளறலாக வருகிறது. ஏதோ இளஞர்கள் ஆர்வக்கோளாறில் எடுத்து பாழ்படுத்தியுள்ளார்கள். படு அபத்த படம். இதை ” பின் நவீனத்துவ குறியீடு’ சினிமா என எழுதுகிறார்கள். இப்படி எழுதுகிறவர்களுக்கு பின் நவீனத்துவம், சினிமா, குறியீடு என எதுவும் தெரியவில்லை. இதெயெல்லாம் வாசிக்கதவர்கள்தான் அண்ணாந்து பார்ப்பார்கள். கோணங்கியின் பாழி நாவலை வாசித்த திகில் அனுபவம். டைட்டிலில் குறிப்பிட்டிருந்த நம் நண்பர்கள் பாவம். அவர்களை வாசித்து கொத்து பரோட்டாவை சமைத்துள்ளார்கள்.