நம்பிக்கை/அதிரன்


” எப்படி சொல்றதுன்னு தெரியல.. உங்க பொண்ணுக்கு பிளட்கேன்சர்…. என்றார் டாக்டர்

“ஐயா என்ன சொல்லுறிங்க ” என்று பதறிய பெரியவரை சமாதானப்படுத்தி
” நான் ஒரு மாதம் மாத்திரை கொடுக்கிறேன்… அதை தவறாமல் உங்க பொண்ணை சாப்பிடச்சொல்லிவிட்டு அப்புறமா டெஸ்ட் எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர்

ஒரு மாதம் கழித்து ரிப்போர்ட்டை பார்த்த .. அந்த நவநாகரீக நாஸ்திக டாக்டர்க்கு வியர்த்துக்கொட்டியது

பெரியவரை அழைத்து ஐயா நீங்க என்ன பண்ணினீங்க என்றார் டாக்டர்

“ஒன்னுமில்லைங்க உங்க மாத்திரையோட என் குலதெய்வம் புற்று நாகமையின் புற்றுமண்ணையும் கரைச்சு என் பிள்ளைக்கு கொடுத்தேன் அம்புட்டுதான் என்றார்”

“உங்க பொண்ணு பரிபூரணமா குணமாகி விட்டாள் ” என்றார் டாக்டர்

அப்படியா ….அப்படியா… எங்க ஆத்தா மகிமையும் உங்க கைராசியும் தான் என்று சொல்லி கொண்டே காலில் விழ முயன்ற பெரியவரை தடுத்து நிறுத்திய டாக்டர் தன் மனதுக்குள்
” ஆண்டவனே என்னை நாஸ்திகனாகவே இருக்கவிடு” என்று கண்ணில் நீர் மல்க வேண்டிக்கொண்டார்