யோகி – இன்றொரு சேதி/விசிறி ஷங்கர் 



O
உலக அமைதி என்பதை உருவாக்குவது எவ்வளவு கடினம் என யோகி குறிப்பிடது யாரிடம் ?
O
தொண்ணூறுகளில் இரண்டு ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழும் பாக்கியம் பெற்றார் யோகி அன்பர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு மைக்கேல் அவர்கள். லீ லோஸோவிக் அவர்கள் மூலம் யோகியை அறிந்து, லீ அவர்களின் பணிக்காக இந்தியா வந்தவர்.
O
திருவண்ணாமலை ஆஸ்ரம கட்டுமானம் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தினமும் யோகியை தரிசிக்க ஆஸ்ரமம் வந்து விடுவார். யோகி அன்பர்கள் பலருக்கும் நன்கு பரிச்சியமானவர்.
O
ஒருநாள் காலை சிற்றுண்டியின் போது, யோகி திரு மைக்கேல் அவர்களிடம், உலக அமைதியை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினமான காரியம் தெரியுமா என்று யோகி உள்ளம் உருகச் சொல்லியிருக்கிறார். யோகியின் உலக அக்கறை, உருக்கம் மைக்கேல் அவர்கள் கண்களில் நீரை வரவழைத்து , சிறிது நேரத்தில் அவர் தேம்பித் தேம்பி அழத் துவங்கி விட்டார்.
O
யோகி ” ஓ.. இந்தப் பிச்சைக்காரன் மைக்கேல் இதயத்தை தொட்டுவிட்டான் ” (Ah this beggar touched Michael ) என்று கூறி சிரித்துள்ளார்.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா See less