லாக் டவுன்/புஷ்பா விஸ்வநாதன்

‌நடைப்பயணம் தொடங்கி இரண்டு நாளாச்சு. முப்பது பேர்களுக்கு மேல் குடும்பம் குடும்பமாக குழந்தைளுடன் , மூட்டை முடிச்சுக்களுடன், ஆள் அரவமற்ற சாலைகளில் நெடுந்தூர நடைப்பயணம் மிகமிகக் கொடுமை. இதற்கெல்லாம் மூலகாரணம் கண்ணுக்குத்தெரியாத ஒரு நுண்கிருமி என்பதுதான் சோகம். பஞ்சம் பிழைக்க கிராமத்திலிருந்து வந்து , உழைத்து முன்னேறுகிற வேளையில் கொரோனா அவர்கள் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டதால், ஊருக்கே திரும்பி காவ்நடையாகச் செல்கிறார்கள்.

‌இப்போது வழியில், இளைப்பாறும் வேளையில், திறந்திருக்கும் மருந்துக் கடையில், குழந்தைக்குப் பால் பவுடர் வாங்கப் பணமில்லையே என்று கலங்கிய சுகுமாரை தெரு முனையில் தென்பட்ட ஒரு கோவில் பக்கம் இழுத்துச் சென்றாள் மனைவி ., சுவாரஸ்யமின்றி மூடிக் கிடந்த கோவிலைப் பார்த்த அவன் கண்களில் சடக்கெனப்பட்டது உண்டியலின் வாயில் துருத்திக்
கொ ண்டிருந்த ரூபாய் நோட்டு ..
.கலரைப்பார்த்தால் ஐநூறு
‌ரூபாய் போல் இருக்கிறது. யாருக்கோ அவசரம். மனைவி போனபின் சுவரேறிக்குதித்து அந்தப் பணத்தை எடுக்கும்போது அவன் நினைத்தான் ” ஆண்டவனே, என்னை நாத்திகனாகவே இருக்க விடு”.