
“அடியே கண்ணம்மா, சீக்கிரம் வெளியே வா. அடுத்த தெருவுக் கு ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாராம். சொல்றதெல்லாம் அப்படியே பலிக்குமாம். எல்லோரும் அங்கேதான் படையெடுக்கறாங்க. சீக்கிரம் வா. நாமும் போலாம்”
“இதோ வந்துட்டேன், செல்லியக்கா” குரல் கொடுத்துக் கொண்டே வாசலுக்கு வந்த கண்ணம்மா விடம் “நூறு ரூபாய் எடுத்துண்டு வர போறும்” என்றாள் செல்லியக்கா.
“அதுக்கு நான் எங்க போற தாம்” என்று முணுமுணுத்த கண்ணம்மா பக்கத்தில் இருந்த மகன் சம்பத் கையிலிருந்த, அவன் செருப்பு வாங்குவதற்காக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த, நூறு ரூபாய்த் தாளைப் பிடுங்கிக் கொண்டே சொன்னாள்., “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவும், உன் அக்காவுக்கு நல்ல வரன் கிடைக்கவும் தான் அருள்வாக்கு கேக்கப்போறேன்”.
மறுநாள் காலை டிவியில் பிரேக்கிங் நியூஸ். ” சாமியார் கைது.. சிறையிலிருந்து தப்பியோடிய கைதி மக்களை ஏமாற்ற சாமியார் வேஷம் “
சம்பத் நினைத்துக் கொண்டான், “ஆண்டவனே, என்னை நாத்திகனாக
