இனிக்கும் தமிழ் – 119/ டி வி ராதாகிருஷ்ணன்


 பழமொழி நானூறு..

தமக்கு மருத்துவர் தாம்

நம் ஆரோக்கியத்திற்கு நாம் தான் பொறுப்பு.

சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம்
என்று நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு யாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது.

பாடல்

‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.

பொருள்

‘எமக்குத் = எனக்கு

யாவர்?’  = யார்

என்று எண்ணி = என்று நினைத்துக் கொண்டு

தமக்குத்  = நமக்கு

துணையாவார்த் = துணை செய்பவர்களை

தாம் = நாம்

தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது

பிறர்க்குப் = மற்றவர்களுக்கு

பிறர் = ஒருவர்

செய்வது ஒன்று உண்டோ? = உதவி செய்வது என்று ஒன்று உண்டோ ?

இல்லை;- = இல்லை

தமக்கு மருத்துவர் தாம் = நமக்கு மருத்துவர் நாம் தான்

நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர். வேறு யாரையும்
நம்பாதீர்கள் என்கிறது இந்தப் பாடல்

                       –

ReplyForward