என்றோ எழுதிய

🌷க.சோமசுந்தரி.

என்றோ எழுதிய
பழைய
நாட்குறிப்பின்
பழுத்த
கசங்கிய
பக்கத்திலிருந்து
எதைச்சையாக
கீழே விழுகிறது
ஒரு அஞ்சல் அட்டை!

அப்பா
நலம் விசாரித்த
அன்றைய
பிரிய எழுத்துக்கள்!

கால ஓட்டத்தில்
அடிக்கடி…! இன்றும்
நலம் விசாரிப்பாய்
சிரித்த முகத்துடனே
எட்டி‌ப் பார்க்கிறது.

நடு வீட்டு
சுவற்றில் தொங்கும்
அப்பாவின் புகைப்படம்!

One Comment on “என்றோ எழுதிய”

Comments are closed.