
ஒருநாள் உலகத்தில் எங்குமே நெட் கிடைக்கும்..
ஆனால் புட் கிடைக்காது!
தட்டில் ரெண்டு இட்டலி வைத்தால்..
ஏதோ பசி தீரும்..
பீங்கான் தட்டில் சிலிகான் வைத்தால்
எவரின் பசிதீரும்?
இருந்த இடத்தில் ஆர்டர் கொடுத்தால்..
பீட்சா வரலாம் ஐயா..
எங்கே அழுகிற குழந்தைக்கு
அம்மாவோட அமுதப் பால் வருமா?
ஊரில் எங்கு எதுயெது உண்டு
கூகுளைத் தட்டுத் தெரியவரும்..
உன் உறவுகள் பிரிந்து போனதுவே
ஒட்டவைக்கவா இயலும்!
காலை மாலை இரவு முழுவதும் கேம்
ஆடட்டும் குழந்தைகள்..
கண்ணீர் அன்பு அப்பா அம்மா..
தேடட்டும் வரும் நாளிலே!
பணப்பரிமாற்றம்..
பாங்கு பேலன்ஸூ கைப்பேசியில் காணுவோம்..
பாலூட்டிய பாசப்பரிவை அன்னை தந்தையின்
அன்பு சேமிப்பை ஸ்பரிசத்துக்காக..
ஏங்குவோம்.!
வாழ்க கைபேசி..
தொலைவை அருகே கொண்டு வந்தாய்!
அருகே இருந்த உறவை
தொலைவில் நிறுத்தி வைத்தாய்!
.
