
விழிகளுக்கு விருந்தாய்
முலைகளை அருந்திக் கொண்டிருந்தீர்கள்..
கண்ணியமான தாய்மையின்
அடையாளத்தை ஏலம்
விட்டுக் கொண்டிருந்தீர்கள்..
உங்கள் விழிகளின் எடைக்குள்
ஒரு தாய்மையின் பரிசுத்தம்
நிலைகுழைந்துக்கொண்டிருந்தது..
தளர்ந்துப் போகாத
வீராடையை அணிந்து
உங்கள் ஏளனப்பார்வையை
மீதித்தே நடையிட்டோம்
பேசப்பட்டக் கேலிகளுக்கும்
இடப்பட்ட வரிகளுக்கும் முன்
இன்னும் இன்னும்
பெருத்தே வளர்ந்தன
எங்களுக்கான அடையாள
மார்பகங்கள்.
