
”ஊடாத பெண்” என்று
உன்னை
உலகறிய
கவிதைக் காரில்
பவனி வரவிட்டார்
‘மணி’!
ஆரஞ்சுச் சுளையு தட்டில்
ஆயிரம் முத்தங்கள்
தாங்கி,
உனக்குத் தரும் வழியை
அறியாமல்
உள்ளம் புழுங்சி
உருகுகிறேன்
நான்!
- திசை மாற்றம் –
கல் தோன்றி
மண் தோன்றாக்
கணக்கியம்பும்…
நின் அறிவு
தொல் பொருளாய்
பனிக்கடியில்
துயில்கின்ற வேளையில்
மதி நெருங்கி
உடல் தழுவி
ஓராயிரம் முத்தம்,
உடன் கிடைக்கும்
மதி முத்தம்;
பதிலுக்குப் பதில் முத்தம்,
பாரறிய நீள் முத்தம்–
நெஞ்சு பரபரத்து
நினைந்து நினைந்துருகி
நாள் குமைய
யாரோ
எவனோ
எந்தப் பாவியோ
துயில் அறியாத
தன் அறிவாலே
விண்ணில் விரல் வளர்த்து
வான் மதியைத் தொட்டு
விட்டான் !
…………………
- திசை மாற்றம்
உன் முகத்தை
நான் பார்த்து
உன்மத்தன் ஆகையிலே,
உன் முதுகை
இரவிருட்டில்
‘ராக்கெட்டு’ விரலாலே
ரஷ்யர், அமெரிக்கர்
ரகசியமாய் வருடுகிறார் !
………………….
ஐயோ !
அவை யெல்லாம்
ரத்தப் பசியெடுத்த
ராட்சஸ விரல்கள் !
சதை கிழிக்கும்
சனியன்கள் ;
ரண களத்தில்
உலகத்தின்
தலை விதியை
நிர்ணயிக்கும்
பட்டாளப்
பாட்டுக்கள் !
சிவன் கால்
பெரு விரல் !
விரலூன்றி
விண்ணில்
களம் அமைக்க
விடுகின்ற
வெள்ளோட்டம் !
…………………….
ஊடாத பெண்ணொருத்தி
உண்டென்றால் —
அது நீதான் !–
நீ தான் என்று
ஏனோ எழுதினார் ?
வனெவனோ
அறிய வைத்தார்!

வேணு ….வேனுவாகிவிட்டது.
கவிதைகள் சிறப்பாய் அமைந்துள்ளன.