என்பா – 62, என்பா – 63

கு. மா. பா. திருநாவுக்கரசு

என்பா – 62:

நொடிமுள் விரைந்தும் பதிவது இல்லை!
துடிக்கின்ற இதயம் கண்ணிற் படுவதில்லை!
கடிகார முட்கள் மூன்றும் சுழன்றும்,
மணிநிமிடங்களே நினைவில் நிற்கும்!

என்பா – 63:

உசுரை உருக்கி கிறுக்கி வச்சாங்க!
அய்த்தைமகன் வரைஞ்ச அஞ்சல் அட்டைகள்!
படிச்சிருந்தால் என்நெஞ்சில பதிச்சு இருப்பேன்!
எரவாணத்துல பதுக்கி வைச்சேன்!