இரவில் பெய்த மழை/ பேயோன்

முதல் தேநீரைப் பருகத்
தெருவில் இறங்கினேன்
தரையெங்கும் நிழல் போல் ஈரம்
வட்டமாக உடைய முயன்ற
கண்ணாடிச் சில்லுகளாய்
அங்குமிங்கும் பளிங்குக் குட்டைகள்
நள்ளிரவு வரை விழித்திருந்தேனே
என்னை விட்டுப் பெய்யலாமா?