நிகழ்வுகள்/- பேயோன்

டூவிலர் ஒன்று விரைந்து செல்கிறது
ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது
இருபது ஆண்டுகளாகத் தினமும்
எதிர்ப்படும் கிழவர் கடந்து போகிறார்
ஒருவர் தோளில் மூட்டை சுமந்து வருகிறார்
ஒரு பெண்மணி கருப்பு பர்தா அணிந்து செல்கிறார்
சிலர் பேசுவதை நிறுத்தி
அவரை வேடிக்கை பார்க்கிறார்கள்
குப்பை பொறுக்குநர் ஒருவர்
ஒரு தெருவோரக் குவியலைக் குடைகிறார்
குறைந்த தொலைவுகளுக்கு
வண்டி எடுக்க சோம்பேறித்தனப்படும்
ஸ்டாண்ட் ஆட்டோக்காரர்
மாலைச் செய்தித்தாள் படிக்கிறார்
பள்ளிச் சீருடையில் ஒரு சிறுவன் ஓடுகிறான்
ஒருவர் தன் சைக்கிளில் தடுமாறி ஏறுகிறார்
நானும் நடந்துகொண்டிருக்கிறேன்
வேறெதுவும் நிகழாதது போல.