கண் புரை/அழகியசிங்கர்

போன வாரம் இதே நாளில் காலை 5 மணிக்கே எழுந்துவிட்டேன். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது கண்ணில் மருந்து போட்டுக் கொண்டிருந்தோன்.

அறுவை சிகிச்சை செய்கிற கண் மருத்துவமனைக்குச் சொன்றோம். கூட துணைக்கு என் உறவினரும் எங்களுடன் வந்திருந்தார்.

பச்சை டிரஸ்ஸை மாட்டிக்கொண்டு அறுவை சிகிச்சை நடத்துமிடத்திற்குச் சென்றேன்.

என்னுடைய கண் புரையின் பெயர்.Black total cataract. இடது கண்ணில். இந்த அறுவை சிகிச்சை ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

அதற்குமுன் சர்க்கரை நோய் என்னுடன் 20 ஆண்டுகளாக ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது. இதுவரை மாத்திரை மூலமாகத்தான் சர்க்கரை நோயை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போதோ இன்சுலின் மூலமாகத்தான் சர்க்கரை அளவை சரி செய்ய முடிந்தது. இதில் எனக்கு விருப்பமில்லை.

அறுவை சிகிச்சைக்குப் பின் தினம் தினம் விதம் விதமான சொட்டு மருந்துகளை ஏழு முறை கண்ணில் விட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்தத் தருணத்தில் நான் டிவி பார்க்கவில்லை. கம்ப்யூட்டர் தொடவில்லை.வாட்ஸப் முயற்சி செய்யவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றில் தீவிரமாக இருந்தேன். யூ ட்யூப் சானலை காதல் கேட்பது.
இதன் மூலம் பலருடைய பேச்சுக்களை கேட்டு ரசித்தேன். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது வியப்பில் ஆழ்ந்தேன்.

யார் யார் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

விநாயகர் அகவல் கேட்டுவிட்டுத்தான் என் காலை நேரத்தை ஆரம்பிப்பேன். இதைத் தொடர்ந்து இசைக் கச்சேரி கேட்பேன். நெய்வேலி சந்தானம், டி.எம்.கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பட்டம்மாள், யேசுதாஸ். இன்னும் பலரைக் கேட்க வேண்டும்.

அதேபோல் ஆன்மிக சொற் பொழிவுகளையும் கேட்டேன்.
முதலில் இலங்கை ஜெயராஜிடமிருந்து ஆரம்பித்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜக்கி வாசுதேவ், Mooji, ரமணர் பற்றி கணேசன்.
தென் கச்சி சுவாமிநாதன், மீனாட்சி சுந்தரம், இதைத் தொடர்ந்து கதைகள்.
(இன்னும் வரும்)

4 Comments on “கண் புரை/அழகியசிங்கர்”

  1. இந்த மாதிரி உட்கார்ந்து ஆற அமர கேட்டு ரசிக்க, உங்கள் இலக்கிய பணிகளுக்கிடையே நேரம் கிடைப்பது கடினம். கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள். சீக்கிரம் பூரண குணமடைய எனது பிரார்த்தனைகள்.

  2. நல்ல விதமான கட்டாய ஓய்வு. கேளுங்கள். படிப்பது போல் தானே செவிச் செல்வமும். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

  3. குதிரைகள் படுப்பதில்லை. அவைகளுக்கு ஓடுவதில்தான் சுகம்.
    மனிதனுக்கு ஓடும்போது உட்காரலாம் என்று தோன்றுகிறது தான். உட்கார்ந்து விட்டால் எழுந்திருப்பது கடினம். ஓடும் போது வராத அலுப்பு உட்கார்ந்தால் வருகிறது.

    ஓடிக்கொண்டு இருக்கும் குதிரை போல நீங்கள்.‌அதனால்தான் அமரும் வாய்ப்பு கிடைத்த போது உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இன்னொரு திக்கில் ஓட மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்.

    உங்களால் ஓடாமல் இருக்க முடியாது.

Comments are closed.