
‘விட்டல் ராவும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம் ‘. – நன்றாக இருக்கிறது சந்தியா பதிப்பகம் வெளியிட இருக்கும் பாவண்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு.
ஏற்கனவே, பாவண்ணன் இப்படி வெங்கட் சுவாமிநாதனுடன் நிகழ்த்திய சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்பான தொகுப்பு ஒன்றை சந்தியா பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.
விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்தின் ‘ஜெயகாந்தன் விருது’ பெற இருக்கும் இந்த நேரத்தில் விட்டல்ராவ் எனும் ஆளுமையை மேலும் புரிந்து கொள்ள உதவும் அசலான திறப்புகளை இந்த உரையாடல்கள் பாவண்ணனின் வெளிச்சத்தில் உண்டாக்கும்.
விட்டல் ராவ் எங்கள் அப்பாவுக்கு(ம்) நெருக்கமானவர். கணபதியண்ணனின் ஆதம்பாக்கம், லட்சுமி ஹயக்ரீவ நகர் ‘ மகிழம் பூ’ வீட்டிலிருந்து ஒரு இருபது எட்டு வைத்தால், டானாத் திருப்பத்தில் அவர் வீடு.
லா.ச.ரா போல இவருக்கும் வசீகரமான பூனைக் கண்கள். விட்டல் ராவே ஒரு ஓவியர். அவரை ஜீவா வரைந்திருக்கிற இந்த ஓவியத்தில் இருந்து தான் இந்தப் பதிவுக்கான முதல் வரியை நான் பெற்றுக் கொண்டேன்.
எப்போதும் நான் குறிப்பிடுவது போல, ‘ பெறுவதுதானே பேறு’.
