
எனக்கு இந்த ஊர்.
இந்த நிலையத்தில் இறங்கிக் கொள்கிறேன்.
உங்களுக்கு உங்கள் ஊர்.
உங்கள் ஊர் நிலையத்தில் நீங்கள்
இறங்கக் கூடும்.
தொடர் வண்டி தாண்டிச் செல்கிறது
என் ஊரையும் உங்கள் ஊரையும்,
தகித்துக் குளிர்கிற
தண்டவாளங்களை
என் ஊரில் இருந்து நானும்
உங்கள் ஊரில் இருந்து நீங்களும்
தனிமையில் பார்த்திருந்து
தவிக்க விட்டுவிட்டு.
%
2015
