யார்?/இலத்தூர் கி.சங்கரநாராயணன்.

வானத்தில் வண்ணங்களை வாரி இரைத்தவர் யார்?
வாணவேடிக்கையை வாழ்த்தி அனுப்புவர் யார்?

பாலை வனத்தினிலும் பாறை நிலத்தினிலும் பாதுகாத்து நீரைப் பரிசளிப்பவர் யார்?

சோலைக்குயில் குரலில் தேனைச்
சேர்த்துக் குழைத்தவர் யார்? மாலை முடிந்தவுடன் கதிரை
மேலை அனுப்புவர் யார்?

இறையெனச் சொன்னாலும்
இல்லையெனச்
சொன்னாலும்
இயற்கை நிகழ்வுகள்
இயக்கம் நிச்சயம்

இயற்கை முழுமையை அறியும் நாள்வரை
இறைவன் இருப்பதாய் இனிதே நம்புவோம் .

2 Comments on “யார்?/இலத்தூர் கி.சங்கரநாராயணன்.”

Comments are closed.