
யார் நீ என அறிவிக்கும் அரியணை…
ஆணவம் அமரும் அரியணை…
‘நீ’ நீங்கிய அரியணையே,
நிம்மதி அமரும் அரியணை !!!
இருக்கும் வரை தானே…
இருக்கைகள் இருக்கும்…
‘இருக்கை’யில் அமைதி
இருக்கையில் இருப்பு சுகம்…
‘இருக்கை’யில் வீற்றிருப்பது
இறுமாப்பு எனில் இருப்பு நரகம்…
‘இருக்கை’யில் இருக்கையில்
இன்பமாய் இருக்க…
இருக்கை உனதல்ல…
இருப்பு மட்டுமே உனதென்று உணர்…

மிகவும் இறுக்கமாகவே
மனிதில் இருந்த விட்டதது
இந்த இருக்கை கவிதை
அருமை 👌👌👌👌
ரசிக்கும்படியாக இருக்கிறது.