நம்பிக்கைதானே வாழ்க்கை!/உமா பாலு

நாராயண சாமி ஒரு தனியார் பஸ் கம்பெனியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.
ஐம்பது வயதிலும் இளைஞர்போல சுருசுருப்புடன் வளைய வருவார் .
தன் மகளை டீச்சராக்கி பக்கத்து ஊரில்
கட்டிக்கொடுத்திருந்தார் .அந்த ஊரும் அவர் வழிதடத்தலேயே இருந்ததால்
அவ்வப்போது மகளை சந்திக்க முடிந்தது
மகன் கட்டடக்கலை இறுதி வருடம்.
அடுத்த வருடம் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான்.
அன்று காலை ட்யூட்டிக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கையில் மனைவி சாப்பாட்டை கையில் கொடுத்த படி
இன்று மாலை கடைக்குப்போக வேண்டும் .பெண்ணுக்கு முதல் ஆண்டு திருமண நாள் வருவதால் மாப்பிள்ளைக்கும் சேர்த்து புதிய துணிமணிகள் எடுக்க வேண்டும் என்றாள்.
சரி என்ற படி கிளம்பியவர் பஸ்ஸில் ஏறும்போது சற்று சோர்வாக உணர்ந்தார். எழுந்ததிலிருந்தே ஏதோமாதிரி உணர்ந்தாலும் மனைவியிடம் சொல்லவில்லை.
வேலைக்குச்செல்ல விடமாட்டாள் என்று.லீவு எடுத்தால் சம்பளம் கட் ஆகுமே.
பஸ்ஸில் ஒரு பத்து பேர் மட்டுமே ஏறினார்கள்.இந்த ரூட்டில் அரை மணிக்கு ஒரு பஸ்தான்.மூன்றாவது நிறுத்தத்தில் இரண்டு பேர் இறங்கினார்கள்.
ஓட்டிக்கொண்டே இருந்தவர் நெஞ்சில் லேசான வலியையும் அசௌகரியத்தையும் உணர்ந்தார்.உடன் வந்த அடுத்த நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினார்.
அண்ணே இங்க யாரும் எறங்க வேண்டாம் என்றபடி நடத்துனர் அவரை நோக்கி வர அவர் இஞ்சின் ரிப்பேராகி விட்டது எல்லாரும் சற்று இறங்குங்க என்றார் .அவர்களும் ஏதோ முனுமுனுத்தபடி இறங்கினர்.
ஓட்டுனரிடம் தம்பி நெஞ்சு வலிக்கிறது
ஒரு சோடா வாங்கி வா என்றவுடன்
அவன் இதோ வரேண்ணா என்ற படிசற்று பின்னால் இருந்த அந்த சிற்றூரின்
ஒரே கடையை நோக்கி விரைய
அவர் பஸ்ஸை அரை கிலோ மீட்டர்
தொலைவில் இருந்த மருத்துவ மனை
நோக்கி செலுத்தினார்.
மனதில் நடத்துனர் பயணிகளை பார்த்துக்கொள்வான் என்ற நிறைவோடும் நேரத்தில் மருத்துவ உதவி
கிடைத்தால் தாம் காப்பற்றப்படுவோம் என்ற நம்பிக்கையோடும்.