
அந்த ஆந்தைக்கு என்னைப்போல் வேறு போக்கிடம் இல்லை போலும்…
இரவானால் என்அறைஅருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து அலற ஆரம்பித்து விடுகிறது.
அதன் அலறல் ஓய்ந்தவுடன்
காக்கைகள் ஒன்றுகூடி எதிர்க்குரல் எழுப்பது எனது தூக்கத்தை கெடுக்கத்தான் என்று அதிரடியாய் எதுவும் அறிவிக்கவிரும்பவில்லை…
அதனதன் இயல்பில்தான் அவை இருக்கின்றன…நமக்குத்தான்
வாழ்க்கை வெறுமையில் அவை அலுப்பாய் இருக்கிறது.
ஒரு பகற்பொழுதில் காக்கைகள் கூடி ஆந்தையை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டன….என்னால்
ஒன்றும் செய்யஇயலவில்லை.
வந்துபோன அந்தஒருபறவையும் இப்போது வருவதில்லை.
என்னிருப்பை அது வெறுமையாக்கியதற்கு சாட்சியாய்…
இரவெல்லாம் நான்தான் விழித்திருக்கிறேன்.

