மண்டபத்துக் கருவாடு – கவிதை/நாகேந்திர பாரதி


மாவட்டம் முகவை
மண்டபம் கடலோரம்

உப்பில் ஊறிய
நெத்திலிக் கருவாடு

மனைவிக்குப் பிடித்ததை
மறக்காமல் வாங்கி வந்து

கழுவிக் காரமிட்டு
எண்ணையில் பொறிக்க

மண்டபக் கருவாடு
மணக்குது வீடெங்கும்

அன்னையர் தினத்துக்கு
அடியேனின் பரிசு