
“என் மனைவி இறந்து 12 வருடங்கள் ஆகி விட்டன.
இரண்டு மகன்கள். அதிலும் ஒரு மகன் இறந்து விட்டான். மற்றொரு மகன் திருநெல்வேலி மனொன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறான். அவனுக்கு இனி திருமணம் செய்ய வேண்டும். மகன் எப்போதாவது வீட்டிற்கு வருவான். இங்கு நான் மட்டும் தனியா இருக்கிறேன்.
நன்மை, தீமை என்று என்னைக் கண்டிக்கக் கூட ஆளில்லை. நான்தான் என்னைக் காத்துக் கொள்ள வேண்டும். என்மனைவி இறந்ததில் இருந்து காலை சாப்பாட்டை நிறுத்தி விட்டேன். இருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். அதுவும் 12 ஆண்டுகளாக ஓட்டலில் தான் சாப்பிடுகிறேன். தனிமை பெரும் மனஅழுத்தத்தைக் கொடுக்கும். அதிலிருந்து என்னை மீட்பது இலக்கியம்தான். எனக்கு எழுத, படிக்க, பேச எல்லாமே இலக்கியம்தான். அதுதான் எனக்குத் துணையாக உள்ளது. எழுத்து மட்டும் இல்லையென்றால் இந்நேரம் செத்துப் போயிருப்பேன்”
2020 இல் தமிழ்வணக்கம்.காம் நேர்காணலில் சோ.தர்மன் சொன்னது.
முக நூலில் ஆர். கந்தசாமி வெளியிட்டது.
