கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?/வைரமுத்து

நிறையச் சொல்லலாம். சொல்லிக் கொண்டே இருக்கலாம். கொள்கையோடு கலந்து வரும் கலைஞரின் சமயோஜித புத்தியை நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர் பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது பாயப்போய்விட்டார்கள். ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் ஙகைகாட்டி அமர்த்திய கலைஞர், “ஹண்டே, தவறாகச்சொல்கிறீர்கள். இது மூன்றாம்தர அரசல்ல. நான்காம் தர அரசு பிராமண, சத்ரிய, வைசிய, சூத்ர என்ற வரிசையில் இது சூத்திரர்களின் அரசு’ என்று சொன்னார். இந்த பதிலைக் கேள்விப்பட்டு பெரியார் ஆடிப்போய்விட்டாராம். பெரியார் சாதாரணமாக நெகிழமாட்டார். அப்படிப்பட்ட பெரியாரையே இந்த பதில் உணர்ச்சிவசப்படுத்தியது. இது கொள்கையோடுகூடிய சமயோஜிதம். தனது பேராற்றல் முழுவதையும் இயக்கத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறவர் கலைஞர்.

நன்றி:தமிழ்கிங்டம்.காம்

தகவல்: ஆர்.கந்தசாமி