
பரந்த வானில்
ஒளிரும் நட்சத்திரமாய்
ஆழ்கடலில் மூழ்கி எழும்
வெளிச்சமாய் எனக்குள்ளும்
பிரவேசிக்கின்றாய்…
ஆர்பரிக்கும் அருவியில்
பிறந்து
சலசலக்கும் நதியிலோடும்
கூலாங்கற்களாய் எனக்குள்ளும்
பயணிக்கிறது உம்சொற்கள்…
பிரபஞ்சவெளியில்
பயணிக்கும்
ஐம்பெரும்பூதங்களாய்
எமக்குள்ளும் நிறைகிறாய்
யாதுமாகியாய்.
