டேப் கே.குருசாமிதாஸ் – நா.விச்வநாதன்


””””’
குஜ்லி என்றால் அரிப்பு என்று பொருள்.
அரித்தால் சும்மா இருக்கமுடியாது.நமநம
என்று அரிப்பதை உடனடியாகச் சொறிந்
து கொண்டால்தான் நிம்மதி.திருப்தி.
உடனடியாகப் பாட்டாகப்பாடி பதிவு செ
ய்து எல்லோரிடமும் சொல்லிவிடவேண்
டும்.இன்றேல் தலை வெடித்துவிடும்.முச்
சந்தி இலக்கியவகையில் சேர்க்க ஏலாது.
ஒருவித உந்துதல்.இட்டுக்கட்டும் திறன்.
நடக்கும் சம்பவங்களைப் பாட்டாய்ப்பாடிப்
பதிவு செய்ய அபார ஆற்றல் வேண்டும்.
அனேகமாக நிறைய ஊர்களில் இது போ
ன்ற ஆசுகவிகள் இருந்திருக்கலாம்.இந்த
அபாரமான ஆற்றல் தஞ்சாவூர்- குடந்தை
பகுதிகளில் வாழ்ந்த கலைஞர் ஒருவரி
டம் இருந்தது.

‘ஜெகமெங்கும் டேப்புடனே ஆஜராகி
பாடிவரும் வாணாதுரை பத்துக்கட்டுவீதி
தங்கமெடல் பரிசுபெற்ற வித்வான் கே.கு
ருசாமிதாஸ்” என்ற நாட்டார்கலைஞரிடம்
இருந்தது.கும்பகோணத்துக்காரர். இவர்
பாடல்களை குஜ்லிவகையில் சேர்க்கலா
ம். அரியலூர் ரயில்விபத்து, கும்பகோண
ம் நீலத்தநல்லூர் மாட்டுச்சந்தை,திருவி
ழாக்கள்,கள்ளக்காதல்,கோரக்கொலைக
ள்,யுத்தம்,பஞ்சம்,கலவரம் போன்ற மக்
களை உடனடியாக ஈர்க்கும் விஷயங்க
ளை ஆசுகவிமாதிரி பாட்டாகப்பாடிவிடு
வார். அப்படியே அச்சுப்புத்தகமாகவும்
வெளியிட்டுவிடுவார்.அற்புதக்கலைஞன்.
அன்று கே. குருசாமிசிதாஸ் பாடல்கள்
பிரசித்தம்.திடீரென்று டேப்பைத்தட்டிக்
கொண்டு பாட ஆரம்பித்துவிட்டால் மக்க
ள் கூடிவிடுவர்.தஞ்சாவூர் முத்துப்பல்லக்
குத் திருவிழாவின் போது ரோட்டோரம்
நின்று பாடும் குருசாமிதாஸைச் சுற்றி
சனம் மண்டும்.உடனடியாக எதையும் பா
ட்டுக்கட்டும் அபார ஆற்றல். பரபரப்பு நிக
ழ்வுகள் உடனடியாக மக்களை அடையும்
வகையில் குருசாமிதாஸ் பாடுவாராம்.
‘,கலியுகம் திகிலோங்க/ காந்தி மரணத்
தாலே/ நதிபோல் ஓடுதய்யா/ நாடெங்கும்
கண்ணீர்/பதிதனிலே/ சதிகாரக்கொலை
ஞனவன் சண்டாளன்/ இந்நாட்டில் அழிந்
திடுவான்/ வேறோட ஒழிந்திடுவான்
என்று காந்தி இறந்தபோது பாடியது.
மக்களின் கோரிக்கைகளை மனுவாக
அளிப்பதைவிட பாட்டுமூலமாகச் சொல்
வது புதிய உத்தி.

நாட்டுப்புற இலக்கியங்கள் எளிய மக்களி
ன் ஆன்மா.உணர்ச்சிகளைத் தன்னிச்சை
யாக வெளிப்படுத்திப் பாடுவது.சுதந்திர
மாகப்பாடுவது.ராகம் தானம் பல்லவி சுரு
தி என தாமே அமைத்துக்கொள்ளும்‌.நம்
ம குருசாமிதாஸின் அதீத ஆற்றல் நயமா
னது.முக்கியமானது

எங்ளூர்க் கந்தனை/ போலிசு புடிச்சான்/
புடிச்சவனை வெட்டிவிட்டு/ புளிய மரம்
ஏறி/ ஆகாச மார்க்கமா அற்புதமா மறை
ஞ்சான் ‘ என்பார்.’ராமசாமி கொலை/
ரசமான கொலை/ ஊரே நெறஞ்டுச்சு
உத்தமக்கொளம் நெறஞ்சிடுச்ச/ ரத்த
வாடைக் கவுச்சியிலே நாய்நரிங்க வந்திடுச்சி/ நெலத்திலே வேலிபோட்
டான்/ நெலவரம் மாறிப்போச்சு.

ரெட்டைக்கோயில்/ ரெண்டுரெண்டா
வளரும்/ ஊருக்குச் சோறுபோடும்/
உத்தமனூர் அம்மாடி- வெட்டவெட்டத்
துளிக்கும் வீரசிங்கம் பேட்டை/ வெட்டாம
துளிக்கும் உத்தமனூர் அம்மாடி.முப்போ
கம் வெளஞ்சாலும் மோருக்குச் சோறில்
லா அரசூர்’என்பது குருசாமிதாஸ்.இப்படி
நிறைய சம்பவங்களை ஆவணப்படுத்தி
யுள்ளார்.அவரது பாட்டுப்புஸ்தகங்களைச்
சேகரித்தால் கிராமமக்களின் வாழ்வியல்
கூறுகளை அறியலாம்.கும்பகோணம்
நண்பர்கள் மெனக்கிடவேண்டும்.அவரது
படம்கூடக் கிடைக்காதது சோகம்.

தீ விபத்தினால் வீடிழந்த ஒருவன் பாடு
வதாக டேப்குருசாமிதாஸ் பதிவிடுகிறார்.

கோழிபோச்சு
குஞ்சும் போச்சு
குந்தி இருந்த பெஞ்சும்
போச்சு
நடுவிலிருந்த நெலையும்
போச்சு.
வீட்டுப் பத்திரம்
எரிஞ்சுபோச்சு.
வீராயி என் வீராயி
வெரதத்துக்கு

என்ன செய்வேன்

கும்பகோணம் நீலத்தநல்லூர்

சந்தைப் பாட்டு

மாமியத்தை மாமியத்தை
பாத்துவந்தேண்டி
மாட்டுச்சந்தை அதிசயத்த
கேட்டுவந்தேண்டி
முருக்குக் கருப்புக்காளை
ஜோடிகட்டப்போனேன்டி
கருத்தபையன் தெருத்திட்டான்
பொருத்துவந்தேண்டியேலம்மா – எட்டு நடப்போம்டி.

டேப் பாடகர் குருசாமிதாஸ் வாரிசுகள்
இருப்பதைக் கண்டுபிடித்து அவரின்
பாட்டுப்புத்தகங்களைக் கண்டடைய
வேண்டும். குஜ்லி இலக்கியங்கள் மக்க
ள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணங்கள்.

பின் குறிப்பு – கால சுப்ரமணியம்

நான் முன்பு முகநூலில் வெளியிட்ட திருமலைசாமிதாஸின் ‘மம்மட்டியான் கொலைச்சிந்து’ முழு புத்தகப் பதிவில் டேப் குருசாமிதாஸ் பற்றி ந,விச்வநாதனோடு பிற தஞ்சாவூர்காரர்கள் முதன்முதலில் பல தகவல்களைப் பகிர்ந்திருந்தார்கள். அவைகளையும் மீண்டும் பார்த்து நண்பர் மகுடீஸ்வரனின் இக்கட்டுரையில் இணைக்கலாம்.

முகநூலில் : கால சுப்ரமணியம்