கவிதை எழுதுபவர்கள்

அழகியசிங்கர்

கவிதை எழுதுபவர்கள்
எல்லோரும் இப்படித்தான்
அவர் கவிதைகளை யாரும் சரியில்லை என்றால்
அடிக்க வருவார்கள்
முகத்தைத் தூக்கி வைத்துக்
கொண்டு பேச மாட்டார்கள்
ஊரிலுள்ள கவிஞர்களொல்லோரும் என்னிடம் பேசுவதில்லை
நானும் கவிதைகளை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.
எல்லோரும் தூர தூர போகிறார்கள்